என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆங் சான் சூகி
நீங்கள் தேடியது "ஆங் சான் சூகி"
தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மியான்மர்:
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியான்மர் நீதிமன்றம், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்..முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துங்கள்- தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டிப்பு

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியான்மர் நீதிமன்றம், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்..முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துங்கள்- தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டிப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
நேபிடாவ் :
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றதும், இதனை ஏற்க மறுத்த ராணுவம் புரட்சி செய்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #KovindmeetsSuuKyi #IndiaMyanmarMoUs
நய்பிடா:
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ளார். மியான்மர் அதிபர் உ வின் மின்ட்-ஐ இன்று சந்தித்த அவர், மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்.
மேலும், சமீபத்தில் கலவர பூமியாக இருந்த ரக்கினே மாகாணத்தில் இந்தியா கட்டித்தந்துள்ள 250 வீடுகள் மியான்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இங்கு வந்து சேர்ந்த பின்னர் உடனடியாக விசா அளிக்கும் சலுகையை மியான்மர் அரசு இன்று அறிவித்துள்ளது.
அதிபருடனான சந்திப்புக்கு பின்னர் மியான்மர் நாட்டின் ஆளும்கட்சி தலைவரான ஆங் சான் சூகி-யையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசினார். #KovindmeetsSuuKyi #IndiaMyanmarMoUs
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ளார். மியான்மர் அதிபர் உ வின் மின்ட்-ஐ இன்று சந்தித்த அவர், மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்.
நீதித்துறை பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த ஆலோசனையின்போது கையொப்பமாகின.
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இங்கு வந்து சேர்ந்த பின்னர் உடனடியாக விசா அளிக்கும் சலுகையை மியான்மர் அரசு இன்று அறிவித்துள்ளது.
அதிபருடனான சந்திப்புக்கு பின்னர் மியான்மர் நாட்டின் ஆளும்கட்சி தலைவரான ஆங் சான் சூகி-யையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசினார். #KovindmeetsSuuKyi #IndiaMyanmarMoUs
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகியின் கவுரவ குடியுரிமையை பறிக்கும் தீர்மானம் கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. #AungSanSuuKyi #honorarycitizenship
ஒட்டாவா:
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் திட்டமிட்ட இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதே கருத்தை கனடா உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளும் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் தலையிட தவறியதற்காக மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி-க்கு கடந்த 2007-ம் ஆண்டு கனடா அளித்த கவுரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் நேற்று கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு முன்னர் போராடி பல ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த ஆங் சான் சூகி, திபெத் நாட்டை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப் சாய், தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கப் போராளி நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு கனடா நாடு கவுரவ குடியுரிமை அளித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. #AungSanSuuKyi #honorarycitizenship

மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 25-8-2017 அன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமானது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் திட்டமிட்ட இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதே கருத்தை கனடா உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளும் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் தலையிட தவறியதற்காக மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி-க்கு கடந்த 2007-ம் ஆண்டு கனடா அளித்த கவுரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் நேற்று கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு முன்னர் போராடி பல ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த ஆங் சான் சூகி, திபெத் நாட்டை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப் சாய், தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கப் போராளி நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு கனடா நாடு கவுரவ குடியுரிமை அளித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. #AungSanSuuKyi #honorarycitizenship
×

X